Our social:

Friday, 3 November 2017

மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவஸ்தலம்

இத்த்திருத்தலம் திருவாரூர் – காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி 9 மைல் சென்றால் அடையலாம். இக்கோவில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் இக்கோவிலைக் கட்டியதாக வரலாறு விளக்குகிறது.
இறைவன் : ஆத்மநாதர். இறைவி : யோகாம்பிகை.
இத்தலத்திலுள்ள கோவிலுக்கு ஆவுடயார் கோயில் என பெயர் வரக் காரணம் என்னவென்றால் மற்ற கோவில் லிங்கங்களைப் போல் இங்குள்ள லிங்கத்திற்குத் திருவுருவம் கிடையாது. ஆவுடயார் எனும் பீடம் மட்டுமே இறைவனுக்கும் இறைவிக்கும் பொதுவாக அமைத்துள்ளன. இந்த ஆவுடையாருக்குத்தான் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
இக்கோவிலில் இறைவனும் இறைவியும் அந்தர்யாமியாக (அரூபமாக) இருப்பதால் நந்தியோ, துவஜஸ்தம்பமோ, சண்டிகேசுவரரோ கிடையாது.
இக்கோவில் தெற்கு முகமாக அமைந்துள்ளது மற்றும் நெல்லியடி தீர்த்தம் எனும் சுவாமி புஷ்கரணியும் உள்ளது. ஸ்ரீ வல்லபகணபதி கிழக்கு நோக்கி இத்தீர்த்தக்கரையில் எழுந்தருளியுள்ளார்.
அம்மன் சன்னதி சுற்றியுள்ள சுவர்களில் இடப்பட்டுள்ள துவாரங்கள் வழியாகத்தான் அம்மனை தரிசிக்க வேண்டும்.
ஆலயத்தின் அழகை அதிக படுத்தும் விதமாக பஞ்சாக்ஷர மண்டப தியாகராசர் மண்டப சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் மாணிக்க வாசகர் அமைச்சர் கோலத்திலும் மற்றும் சிவனடியார் கோலத்திலும் அற்புதமாக வடிவமைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment