மிளகாயை அரைத்து வழிபாடு செய்யும் மாசாணி அம்மன் கோவில்
மிளகாய் பூசுதல். ,அம்பாளுக்கு வேண்டிக்கொண்டு காணிக்கையாக மிளகாய் பூசி தனது கோரிக்கையை நிறைவேற்றி கொள்வர் பக்தர்கள்.
மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.
மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.
அன்றாடம் ஆயிரக்கணக்கில் பகதர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்பிக்கும் போது, அன்னைத் தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.
இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளாகாய் போட்டு அரைப்பர்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர்
0 comments:
Post a Comment