9 மகான்கள் ஜீவ சமாதியான நவ பிருந்தாவனம்
9 மகான்கள் ஜீவ சமாதியான நவ பிருந்தாவனம்
1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்
2. ஸ்ரீ ஜய தீர்த்தர்
3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர்
4. ஸ்ரீ வாகீச தீர்த்தர்
5. ஸ்ரீ வியாசராஜர்
6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர்
7. ஸ்ரீ ராமதீர்த்தர்
8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்
9. ஸ்ரீ கோவிந்த ஓடயர்
நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.
1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் : . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார்.
2. ஸ்ரீ ஜய தீர்த்தர் : இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின்
( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் : மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட
ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார்.
4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.
5. ஸ்ரீ வியாசராஜர் : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் வியாசராஜர்.
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.
6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர் : இவர் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார்.
7. ஸ்ரீ ராமதீர்த்தர் : இவர் ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாசராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார்.
8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் : காமதேனுவாய், கற்பக விருட்சமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீசுதீந்த்ர தீர்த்தர்.
9. ஸ்ரீ கோவிந்த ஓடயர்: இவர் ஸ்ரீவியாசராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர்.
நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.
0 comments:
Post a Comment