மூலவரே உற்சவ மூர்த்தியாக வரும் அதிசய கோவில்
கும்பகோணம் அருகில் அமைந்துள்ள நாச்சியார் கோவில் கருவறையில் தாயாரும் பெருமாளும் சேர்ந்து அருள் பாலிக்கிறார்கள். கருவறையில் நான்கு தலைகளோடு பிரம்மனும் மற்றும் பிரம்மனும் உள்ள தேவர் சிலைகளும் தாயார் பெருமாள் சிலைகளும் சுமார் 10 அடி உயரமுள்ள சாலிக்ராம கல்லினால் 1500 வருடங்கள் முன்பாக வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.மேலும் இந்த கோவிலின் மிகப்பெரிய அற்புதம் என்னவென்றால் இங்கே பெருமாளும் தாயாரும் கோயில் கொண்டிருந்தாலும் இங்கே பெருமாள் சன்னதி அருகில் குடிகொண்டுள்ள கல்கருடன் தான் இந்த கோயிலின் மூலவர்,உற்சவர் மற்றும் வாகனம் ஆகிய மூன்றுமாக இருப்பவர்.உலகத்திலேயே எங்கும நடைபெறாத அதிசயமான நிகழ்வு வருடாவருடம் திருவிழாவின் போது நிகழ்கிறது. எந்த கோயிலிலும் மூலவரே உற்சவ மூர்த்தியாக செல்வதில்லை. ஆனால் இங்கே மூலவராக உள்ள கல்கருடன் சிலையே உற்சவராக எடுத்துச் செல்லப்படுகிறார் ..அதிலும் ஓர் அதிசயம் முதலில் கருவறையில் இருந்து எடுக்கும் போது நான்கு பேர் சேர்ந்து தூக்கி வருவார்கள் ..கருவறையை விட்டு சற்று தூரம் வந்தவுடன் கனமஅதிகமாகும் இருமடங்கு அதிகமாகி 8 பேர் சேர்ந்து தூக்குவார்கள் ..இன்னும் சற்று தூரம் வந்தவுடன் இன்னும் இருமடங்கு கனம் அதிகமாகி 16 பேர் சேர்ந்து தூக்குவார்கள் ..இன்னும் சற்று தூரம் வந்தவுடன் இன்னும் இருமடங்கு கனம் அதிகமாகி 32 பேர் சேர்ந்து தூக்குவார்கள் ..இன்னும் சற்று தூரம் வந்தவுடன் இன்னும் இருமடங்கு கனம் அதிகமாகி 64 பேர் தூக்குவார்கள் ..அதாவது 4 நபர் தூக்கிய கல்கருடன் சிலையை கடைசியாக 64 நபர்கள் தூக்குவார்கள் ..அதேப்போல கோயிலை நெருங்கி வரும் போது 64 நபர்கள் தூக்கி வந்த கல்கருடன் தன் கனத்தை குறைத்து கொண்டே வந்து கருவறை அடையும் போது 4 நபர் தூக்கி வந்து இறக்கி வைப்பார்கள்.
காரணம்:
பெருமாளை விட்டு விலகிச் செல்லும் போது தன் சக்தியை கூட்டிக்கொண்டு செல்லும் கருடபகவான் பெருமாளை நெருங்கி வரும்போது தன் சக்தியை. குறைத்து கொண்டு பணிவாக வருகிறாராம் ..இது இன்றும் நடை பெறும் அற்புத ஆன்மீக நிகழ்வு .அத்துடன் ஒவ்வொரு கருடசேவை விழாவின் போதும் 15 நிமிடங்கள் கல்கருடன் முகத்தில் வியர்க்குமாம்.
காரணம்:
பெருமாளை விட்டு விலகிச் செல்லும் போது தன் சக்தியை கூட்டிக்கொண்டு செல்லும் கருடபகவான் பெருமாளை நெருங்கி வரும்போது தன் சக்தியை. குறைத்து கொண்டு பணிவாக வருகிறாராம் ..இது இன்றும் நடை பெறும் அற்புத ஆன்மீக நிகழ்வு .அத்துடன் ஒவ்வொரு கருடசேவை விழாவின் போதும் 15 நிமிடங்கள் கல்கருடன் முகத்தில் வியர்க்குமாம்.
0 comments:
Post a Comment