Our social:

Latest Post

Monday 12 November 2018

அமெரிக்காவில் 2 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம்


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! என்பதன் பொருள் ஆழத்தை பலரும் உணர்ந்து இருக்க வாய்ப்பில்லை. (இதன் பொருள் உலக நாடுகள் அனைத்திலும் சிவன் இருக்கிறான் என்பதுதான் பொருள். இதையும், பல்வேறு சம்பவங்கள் நமக்கு உணர்த்தி வருகிறது.டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா பல்வேறு சம்பவங்கள்மூலம் இதை உறுதிபடுத்தியுள்ளார்.)
அமெரிக்காவின் கொலராடோவில் 2 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்க சிலை இருப்பதை இன்றும் வரலாற்றுச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. சுமார் 9,000 அடி உயரத்தில் இந்த சிவலிங்கம் உள்ளது




சிலப்பதிகாரத்தில் வரும் குவைப்பதி மலிந்த கோவே போற்றி! என்பது குவைத்தை குறிக்கிறது. குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக மாறியது என்று கூறுவதுண்டு. அதனால்தான், இன்றும் மெக்கா செல்பவர்கள் வேஷ்டி போன்ற உடுப்பு அணிந்து செல்வதை நாம் பார்க்க முடிகிறது

இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கம் உள்ளது. மக்கீஸ்வரரான லிங்கத்தையே சைத்தான் என்று கூறி முஸ்லிம்கள் கல்லெறிகின்றனர் என்று சிலப்பதிகாரத்தின் 282,283 ஆம் பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன

தமிழகத்திலுள்ள திருமால்பேறு போன்று அமெரிக்காவில் பெரு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்
நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி. சிங்கபுரியே தற்போது சிங்கப்பூர் ஆக மருவி இருக்கிறது. ஆமூர், தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்று ரஷ்யாவில் தைமூர் என்ற தலம் இருப்பதாக கூறப்படுகிறது

ஜாவக நாட்டு மக்கள் அதாவது இன்றைய ஜாவா மக்கள் தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியப் பாடலில் கூறப்பட்டுள்ளது

படைத்தல்,காத்தல், அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிலுக்கு சொந்தக்காரரான சிவனை பிரம்மன்,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்த இடம்தான் இன்று அமெரிக்காவில் உள்ள டிரினிடாட் என்று கூறப்படுவது உண்டு

கூடுதலாக இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவனின் பெருமையை விளக்கும் வகையில் சிவலிங்கம் உள்ளது

ஆக, உலகம் முழுவதும் இந்துக்களின் ஆதிக்கம் முன்பு இருந்துள்ளது என்பதற்கும், உலகம் முழுவதும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெருமைகள் தழைத்து ஓங்கி இருந்து வந்துள்ளது என்பதும் மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. இதன் அடிப்படையில்தான் இந்து சமயமே அனைத்துக்கும் முன்னோடி என்று கூறப்படுகிறது
இரண்டு இலட்சம் வருடம் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சிவ வழிபாடு மிகத்தொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன் (News Review of London) என்ற நாளேட்டில் அச்சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோவில் உள்ள ஒரு மலை பகுதியில்மறைந்து போன உலகம்என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அம்மலைப்பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப்பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது அந்நாளேட்டில் வந்த செய்தியாகும். சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம்.
அது மட்டும் அல்ல. புராணங்களில் பாதாள உலகம் என்று குறிப்பிடப்படுவது அமெரிக்காவைதான். அமெரிக்காவில் உள்ள Horse Island, Ash Island. இரண்டும் பகீரத புராணத்தோடு தொடர்பு உடையது.


Wednesday 26 September 2018

9 மகான்கள் ஜீவ சமாதியான நவ பிருந்தாவனம்

9 மகான்கள் ஜீவ சமாதியான நவ பிருந்தாவனம் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜர் 6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராமதீர்த்தர் 8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த ஓடயர் நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.






1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் : . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார்.


2. ஸ்ரீ ஜய தீர்த்தர் : இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின்
 ( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.


3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் : மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட
 ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார்.


4. ஸ்ரீ வாகீச தீர்த்தர்  : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.



5. ஸ்ரீ வியாசராஜர்  : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் வியாசராஜர்.
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.



6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர் : இவர் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார்.


7. ஸ்ரீ ராமதீர்த்தர்  : இவர்  ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாசராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார்.

8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்  : காமதேனுவாய், கற்பக விருட்சமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீசுதீந்த்ர தீர்த்தர்.

9. ஸ்ரீ கோவிந்த ஓடயர்: இவர் ஸ்ரீவியாசராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர்.

நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.